தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக..; ரோபோ உதவியுடன் கழுத்து நரம்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சாதனை..!
Puducherry JIPMER Hospital achieves feat by performing robot assisted cervical nerve reconstruction surgery
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ரோபோ உதவியுடன் வெற்றிகரமாக கழுத்து நரம்பு தொகுதி மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை செய்து மருத்துவத்துறையில் புதிய மைக்கல்லை அடைந்துள்ளது.
இந்த வெற்றிகரமான சாதனை வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை மருத்துவ சேவையுடன் ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்குவதில் ஜிப்மர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சியின் வெளிப்பாடாக அமைத்துள்ளது.
2026 ஜூன் 29 அன்று இரண்டு நோயாளிகளுக்கு இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது மேம்பட்ட மறுசீரமைப்பு நுண்ணறிவு சிகிச்சைத் துறையில் ஜிப்மர் மேலும் ஒரு முக்கிய சாதனைய படைத்துள்ளதை காட்டுகிறது.

இந்த அறுவை சிகிச்சைகளை மருத்துவர் தினேஷ்குமார் தலைமையிலான மருத்துவக்குழு வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டிய ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் ஜிப்மரின் உறுதிப்பாட்டை இந்த சாதனை வெளிப்படுத்துவதாக கூறி பாராட்டியுள்ளார்.
ரோபோட்டிக் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் வலி குறைதல், மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைதல், விரைவாக குணமடைதல், விரைவிலேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல் போன்ற பல நன்மைகள் நோயாளிகளுக்கு கிடைப்பதாகவும் வீர் சிங் நேகி தெரிவித்துள்ளார்.
English Summary
Puducherry JIPMER Hospital achieves feat by performing robot assisted cervical nerve reconstruction surgery