அனுமதி நேரத்தைத் தாண்டி செயல்படும் பார்கள் - அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்.!
action against run extra time bar chennai high court order
அனுமதி நேரத்தைத் தாண்டி செயல்படும் பார்கள் - அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்.!
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு உள்ளிட்டோர் அமர்வில் நடைபெற்றது.
அப்போது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட பார்கள் மீது அபராதம் விதித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அதில், கலால் துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத்த தகவலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்கள் செயல்படுகிறதா? என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதுமட்டுமல்லாமல், நீதிபதிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி, திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு இந்த வழக்கினை முடித்து வைத்தனர்.
English Summary
action against run extra time bar chennai high court order