ஆம்பூர் அருகே இளைஞர் வெட்டி படுகொலை! மகனை மடியில் போட்டு கதறி அழுத பெற்றோர்!
Aambur jayaprakash murder case
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் தாய், தந்தை கதறி அழுத காட்சியும், கொலையாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்க்கவே பெரும் துயரமாக இருந்தது.
ஆம்பூர் அடுத்த கீழ் மிட்டாளம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்ற இளைஞரை, அவரின் வீட்டின் அருகே வைத்தே சுத்துப்போட்டு மர்ம கும்பல் சராசரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

வீட்டின் அருகிலேயே மகனை வெட்டி கொலையுண்டு கிடந்ததை கண்டு ஜெய்பிரகாஷ் பெற்றொடுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகனின் இறந்த உடலை மடியில் போட்டு தாயும், தந்தையும் கத்தி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர் நெஞ்சை புதைப்பதைக்க வைத்தது.
மேலும், இளைஞர் ஜெயபிரகாஷை கொலை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, அந்த இடத்திலேயே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சம்மதனப்படுத்தி, ஜெயப்பிரகாஷின்ம் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Aambur jayaprakash murder case