குப்பை வாகனத்தில் கிடந்த ஆதார் கார்டுகளும், ஸ்டாம்புகளும்...! கடலூரில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை சந்து தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தூய்மை பணியாளர்கள்  குப்பை வாகனத்தை எடுத்துச்செல்ல முயன்றனர்.அச்சமயம், குப்பை எடுக்கும் வாகனத்தில் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் அதிக அளவில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, சீல் ஆகியவையும் கிடந்தது.இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் தாசில்தார் மகேஷ், குப்பை அள்ளும் வாகனத்திலிருந்த வாக்காளர் அடையாள அட்டைகளை சோதனை செய்த போது அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு, தாசில்தார் இதனை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் குப்பை வாகனத்திலிருந்த வயர்களும் அறுக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவலர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadhaar cards and stamps found garbage truck stir Cuddalore


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->