"டீ"க்கடையை "தீ"க்கடையாக மாற்றிய சைக்கோ.. ஓசி பேர்வழிகள் அட்டூழியம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து பகுதியை சார்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் இருக்கும் பூமிநாதன் என்பவருடைய தேநீர் கடையை தீவைத்து கொளுத்தியுள்ளார். இந்த கடை தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் தீயை அணைத்த நிலையில், கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது. 

இந்த தீயை மக்கள் அணைக்க முயற்சி செய்த சமயத்தில், அப்பகுதியை சார்ந்த குணசேகரன் என்பவரும் தீயை அணைப்பது போல நாடகம் ஆடியுள்ளார். இந்த விபத்து குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்ட நேரத்தில், அதிர்ச்சி தகவலாக குணசேகரன் கடைக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது. 

மேலும், கடைக்கு தீவைத்த குணசேகரன், மக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் நாடகம் ஆடியதும், குணசேகரன் இலவசமாக சிகிரெட் கேட்டு தராததால் ஆத்திரமடைந்து கடையை கொளுத்தியதாகவும் கூறியுள்ளார். அனைத்தையும் செய்து விட்டு நான் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று வாக்குமூலம் அளித்துள்ளதும் தெரிந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a tea shop fired by man due to revenge


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal