பண்ருட்டி நகராட்சிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும்.. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பண்ருட்டி நகராட்சிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. 

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு தனியாக ஆணையரை நியமிக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.தற்போது பண்ருட்டி நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பு ஆணையராக திண்டிவனத்தில் பணிபுரியும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே அதிக பொறுப்புகள் உள்ளதால், பண்ருட்டி நகராட்சிக்கு நேரில் வந்து பணிகளை கவனிப்பது கடினமாகஇருக்கிறது இதனால், பல்வேறு திட்டங்கள் நிறைவேறாமல் தடைப்பட்டுள்ளன.

பண்ருட்டி நகரம் ஒரு முக்கிய வணிக மையமாக இருந்து வருகின்றது. இங்கு வாழும் மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சனைகள் அதிகம் உள்ளன. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காண்பது வழக்கமாக இருந்தாலும், தற்போது ஆணையர் அலுவலகத்தில் இருப்பது குறித்தத் தகவலும் தெளிவாக இல்லாத நிலை காரணமாக மக்கள் அவரை சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் பல்வேறு திட்டப்பணிகள் நிலுவையில் உள்ளன,ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது,
பில் பாஸ் செய்வதில் தாமதம்,மக்கள் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.இதை கருத்தில் கொண்டு, பண்ருட்டி நகராட்சிக்கு முழுநேரமாக செயல்படக்கூடிய தனி ஆணையரை (கமிஷனர்) உடனடியாக நியமிக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர்  ஷேக் நூருதீன் தெரிவித்துள்ளார்.மேலும், பண்ருட்டி மக்களின் நலனுக்காக தமிழக அரசு உடனடியாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A separate commissioner should be appointed for Panrutti municipality Demand from the Tamil Nadu Peoples Democratic Party


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->