மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ்..அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்!
A certificate for students within a week Minister Sathur Ramachandran's information
மாணவ, மாணவியர் சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்தால் வேண்டிய உதவிகள் செய்யப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், "தமிழ்நாட்டில் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், சாதி சான்றிதழ், உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரக் காலத்திற்குள் சான்றிதழ்கள் வழங்க வருவாய்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என என கூறினார்.
மேலும் எந்தவித சிரமுமின்றி ஒரு வாரத்திற்குள் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார் .மேலும் பேசிய அமைச்சர் மாணவ, மாணவியர் சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்தால் வேண்டிய உதவிகள் செய்யப்படும். இ-சேவை மையத்தில் மாணவ மாணவியர் சான்றிதழ் பெற முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
English Summary
A certificate for students within a week Minister Sathur Ramachandran's information