கன்னியாகுமரியில் சோகம்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 04 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!
A 4 year old boy fell from the bed tragically died
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த விளாக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றனி ரமேஷ். வயது 45. இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகள் மற்றும் எய்டன் நினோ என்ற 04 வயது மகனும் இருந்துள்ளான்.
நேற்று முன்தினம் மாலைசிறுவன் எய்டன் நினோ புத்தன்கடை ஆர்.சி. தெருவில் உள்ள உறவினர் வீட்டில் கட்டிலில் ஏறி விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது அவன் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் மயக்கமடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A 4 year old boy fell from the bed tragically died