9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்... போக்சோவில் டிரைவர் அதிரடி கைது...!
9 year old schoolgirl complains harassment Driver arrested under POCSO
விழுப்புரம் அருகே காணை இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் ராஜனின் மகன் அந்தோணிராஜ் (26), சரக்கு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி, அழுதபடியே வீட்டுக்குச் சென்று நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மகள் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தோணிராஜ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட அந்தோணிராஜை விழுப்புரம் நீதிமன்றத்தில் காவலர்கள் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவையடுத்து அவர் வேடம்பட்டில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், அந்தோணிராஜ் மீது கடந்த 2023-ம் ஆண்டிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
9 year old schoolgirl complains harassment Driver arrested under POCSO