விஜய்யிடம் எம்.எல்.ஏ சீட் கேட்டாரா லோகேஷ் கனகராஜ்? புஸ்ஸி ஆனந்த் பேச்சால் வெடித்த புதிய அரசியல் சர்ச்சை! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தற்போது அரசியலிலும் கால் பதிக்க முயன்றாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது.

கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’, ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’, விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள லோகேஷ், சமீபத்தில் ‘டிசி’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அவரது நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு விஷயம்தான் தற்போது இந்த அரசியல் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.

அவர் பேசும்போது, “விஜய்யை வைத்து படம் இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் தேர்தலின்போது ஒரு தொகுதியை கேட்டார். அந்த தொகுதியை வேறு ஒரு மாவட்டச் செயலாளருக்கு கொடுக்க வேண்டியிருந்ததால், அவரிடம் ‘கோபித்துக்கொள்ள வேண்டாம், அந்த தொகுதியை உங்களுக்கு தர முடியாது’ என்று கூறினேன்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த பேச்சைத் தொடர்ந்து, அந்த இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புஸ்ஸி ஆனந்த் இந்த விவரத்தை கூறியபோது, சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷை நோக்கி மற்றொரு எம்.எல்.ஏ ஒருவர் சைகை செய்ததாக கூறப்படும் காட்சியும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதனை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு தகவல்களை இணைக்கத் தொடங்கியுள்ளனர். அமைச்சர் விக்னேஷ் கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. அதேபோல், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரும் கிணத்துக்கடவு பகுதியே என கூறப்படுவதால், புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், விஜய்யை வைத்து லோகேஷ் ஏற்கனவே ‘மாஸ்டர்’, ‘லியோ’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியதுடன், விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதனால், லோகேஷ் கனகராஜ் உண்மையிலேயே தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டாரா? அல்லது புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட இயக்குநர் வேறு ஒருவரா? என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எனினும், புஸ்ஸி ஆனந்த் அந்த இயக்குநரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடாததால், அவர் லோகேஷ் கனகராஜ்தான் என்பதை இதுவரை உறுதி செய்ய முடியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did Lokesh Kanagaraj ask Vijay for an MLA seat A new political controversy erupts following remarks by Bussy Anand


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->