அனிருத் – காவ்யா மாறன் திருமணம்! “பெற்றோர் சம்மதத்துடன்தான் நடக்கிறது” – பத்திரிகையாளர் சேகுவேரா தகவல்! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

அனிருத்–காவ்யா இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் அளித்த பேட்டியிலும் இதுகுறித்த தகவல்கள் இடம்பெற்றதால், திருமணம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சேகுவேரா கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, அனிருத்–காவ்யா திருமணம் இரு குடும்பங்களின் சம்மதத்துடனேயே நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவ்யாவின் விருப்பமே இந்த திருமணத்தில் முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், திருமணம் வெளிநாட்டில் எளிமையான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சேகுவேரா தெரிவித்துள்ளார்.

அதேபோல், அனிருத்தின் குடும்ப பின்னணி குறித்தும், ரஜினிகாந்துடனான அவரது குடும்ப உறவு குறித்தும் அவர் பேசியுள்ளார். திருமணத்திற்கு ரஜினிகாந்த் நிச்சயம் வருவார் என்றும் சேகுவேரா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எனினும், அனிருத்–காவ்யா மாறன் திருமண தேதி, இடம் உள்ளிட்ட எந்த தகவலையும் இரு தரப்பினரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே தற்போது வெளியாகி வரும் தகவல்களை உறுதி செய்யப்படாத தகவல்களாகவே பார்க்க வேண்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anirudh Kavya Maran Wedding It is taking place with the parents consent Journalist Che Guevara reveals


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->