விஜய் நல்லா செயல்படுகிறார்..நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் முடிவு செய்யும்! சூசகமாக பதில் சொன்ன சிம்பு.!
Vijay is performing well Only time will decide if I enter politics Simbu responds cryptically
தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், நடிகர் சிலம்பரசன் விஜய்யின் ஆட்சி மற்றும் மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை குறித்து பேசியதாக வெளியாகியுள்ள கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிலம்பரசனிடம், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த அவர், “இப்போதைக்கு என் சகோதரன் நன்றாக செயல்படுகிறார். அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், விஜய்யை மக்கள் நம்பியதன் வெளிப்பாடாகவே அவர் முதலமைச்சராகியுள்ளதாகவும் சிம்பு குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை நேரில் பார்த்து, அவரது அணுகுமுறையை கவனித்த பிறகே மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்ததாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், “CM விஜய் ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை” என்றும் சிம்பு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இந்த கருத்து விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, “நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா?” என சிலம்பரசனிடம் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் சிரித்தபடி “டைம் இருக்கு” என்று பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது விஜய் அரசியலில் இருக்கும் நிலையில், “இப்போது நான் எதற்கு?” என்ற தொனியிலும் சிம்பு பதிலளித்ததாக கூறப்படுகிறது. விஜய்யை தனது சகோதரர் என்று குறிப்பிட்டு, அவர் முதலில் மக்களுக்கு சேவை செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் “டைம் இருக்கு” என்ற பதில், எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற புதிய எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணம் தொடங்கியுள்ள நிலையில், சினிமா பிரபலங்களின் அரசியல் கருத்துகளும் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
English Summary
Vijay is performing well Only time will decide if I enter politics Simbu responds cryptically