#திருச்சி || ரயில் தண்டவாளத்தில் டயர் வைத்த விவகாரம்.. 8 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!
8 people arrested placing tires on the railway track
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி கடந்த மே 2ம் தேதி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பிச்சாண்டார் கோவில் - வாளாடி ரயில் நிலையங்களுக்கிடையே வந்து போது தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு ரயில் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைத்த நிலையில் ஒரு டயர் தண்டவாளத்திற்கு வெளியே வீசப்பட்டது. ஆனால் மற்றொரு டயர் ரயில் எஞ்சினில் சிக்கியது.

இதனைத் தொடர்ந்து ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. எஞ்சினில் சிக்கிய லாரி டயரை வெளியே எடுத்து சரி செய்த பின்னர் 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலை விபத்துக்கு உள்ளாக்கும் வகையில் டயர்கள் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்தது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 8 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
8 people arrested placing tires on the railway track