டிபன் பாக்சில் தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
62 lakhs worthbale gold seized in chennai airport
டிபன் பாக்சில் தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஹவுஸ் கீப்பிங் பிரிவில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், பணி முடிந்து வெளியில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை வழக்கம் போல் நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார், பரிசோதனை செய்தனர்.

அப்போது ஒப்பந்த ஊழியர் ஒருவருடைய டிபன் பாக்சுக்குள் தங்கப் பசை இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அந்த ஒப்பந்த ஊழியரை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்துவிட்டு சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அதன் படி விரைந்து வந்த சுங்க இலாகா அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர் டிபன் பாக்சில் இருந்த தங்க பசையை ஆய்வு செய்ததில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்க பசை இருந்தது.
இது தொடர்பாக ஒப்பந்த ஊழியரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், "அதிகாலையில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் சென்னை வழியாக இலங்கைக்கு செல்வதற்கு வந்தார்.
அவர் துபாயில் இருந்து கடத்தி வந்த தங்க பசை பார்சலை அந்த ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து விமான நிலையத்தை விட்டு வெளியில் எடுத்துச் செல்லும்படியும், அவ்வாறு வெளியில் கொண்டு வந்த பிறகு அங்கு மற்றொரு கடத்தல் ஆசாமி ஒப்பந்த ஊழியரிடம் உள்ள தங்க பசை பார்சலை வாங்கிக் கொண்டு அவருக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய ஒப்பந்த ஊழியரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.62 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்க பசையையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற இலங்கை கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
62 lakhs worthbale gold seized in chennai airport