மெரினாவில் நடந்து சென்ற மூதாட்டி.. போலீஸ் வாகனம் மோதியதில் ஏற்பட்ட சோகம்.!
57 years old women accidentally died In marina
அம்பத்தூரில் உள்ள கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த 57 வயது மேறி என்பவர் நேற்று தன்னுடைய குடும்பத்துடன் மெரினா கடற்கரையில் இருக்கும் கலைஞர் எம்ஜிஆர் நினைவிடங்களை சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார். அவற்றை சுற்றி பார்த்துவிட்டு காமராஜர் சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது மாநில உளவுத்துறைக்கு சொந்தமான ஒரு வாகனம் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி சென்றது. சாலையை கடக்க முயற்சித்த மூதாட்டி மேரியின் மீது அந்த வாகனம் மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட மேரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த அவர்கள் வாகனத்தை இயக்கிய காவலர் சத்தியமூர்த்தி கைது செய்துள்ளனர். இந்த விபத்தினால் மெரினா காமராஜர் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
English Summary
57 years old women accidentally died In marina