அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.13 கோடி மோசடி...! சிக்கிய 5 பேர்...! - பரபரப்பான விசாரணை...!
5 people caught 13 crore fraud by claiming offer high interest Exciting investigation
மதுரை மாவட்டம் காதைக்கிணறு கிளாசிக் நகரைச் சேர்ந்த விஜய்கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சாந்தினி தம்பதியினர், மதுரையை மையமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். அதிக வட்டி வருமானம், குறுகிய காலத்தில் பலமடங்கு லாபம், மாதாந்திர சீட்டுத் திட்டங்களில் பெரும் ஈட்டல் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்து, ஏராளமான பொதுமக்களை தங்களது முதலீட்டு வலையில் சிக்கவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்திற்கு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் இயங்கி வந்த நிலையில், “சேமித்தால் செல்வம் குவியும்” என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் ஆயிரங்களிலும் லட்சங்களிலும் பணத்தை முதலீடு செய்தனர். குறிப்பாக குறுகிய கால வைப்பு, நீண்டகால முதலீடு, மாதாந்திர சீட்டு திட்டங்கள் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரும் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தியிருந்தார். ஓராண்டு முடிவில் ரூ.36 ஆயிரம் முதிர்வுத் தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் நிறைவடைந்த பின்னரும் பணம் வழங்கப்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த முனீஸ்வரன், திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து காாவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் விஜய்கிருஷ்ணன், சாந்தினி மற்றும் நிறுவன பங்குதாரர்களான ரமேஷ், சுப்பிரமணி, ஜெய்கணேஷ் உள்ளிட்ட 8 பேர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, மொத்தம் 842 பேரிடமிருந்து சுமார் ரூ.13 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது.
இதையடுத்து விஜய்கிருஷ்ணன், ரமேஷ் உள்ளிட்ட 4 பேரை காாவலர்கள் கைது செய்தனர். மற்ற குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் தலைமறைவாகிய நிலையில், அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில், தலைமறைவாக இருந்த சாந்தினி திருச்சி மாவட்டப் பகுதியில் பதுங்கியிருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு காாவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக திருச்சிக்கு விரைந்த காாவலர்கள், சாந்தினியை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மீதமுள்ள 3 பேரையும் காாவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
5 people caught 13 crore fraud by claiming offer high interest Exciting investigation