இந்த ஆண்டு புதிதாக 4,200 பேருந்துகள் வாங்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் - Seithipunal
Seithipunal


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு விரைவு போகுவரத்து கழக பணியாளர்களின் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கும் அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழக பணி காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் 14வது ஊதிய குழு பேச்சுவார்த்தையின் படி ஊதிய உயர்வு நிலுவை தொகையுடன் சேர்த்த்து வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிய ஓட்டுநர், நடத்துனர் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் எனவும், புதிதாக ஓட்டுநர், நடத்துனர் நியமிக்கப்பட்டதும், ஒப்பந்த பணியாளர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு 4200 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளது எனவும் அவற்றில் 200 பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4200 new buses will be purchased this year Minister Sivashankar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->