+2 தேர்வு எழுதிய 34 மாணவர்களின் முடிவுகள், பலகட்ட சோதனைகளுக்கு பின் இன்று வெளியீடு! என்ன காரணம்? நடந்தது என்ன?!  - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 8,03,385 பேரில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், நீலகிரி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய மாணவர்களில் 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மார்ச் 27ம் தேதி நடைபெற்ற கணித பாட தேர்வின் போது, சாம்ராஜ் அரசு உதவிப்பெறும் பள்ளியின் தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு விடைகளை சொல்லி கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து 5 ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வியாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இந்நிலையில் இன்று +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், ஆசிரியர் சொல்லி கொடுத்து தேர்வு எழுதியதாக சொல்லப்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், சிவலையம் சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், 34 மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறைக்கு அனுப்பி, அங்கு அதிகாரிகள் பார்வையிட்டு, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கையை விசாரணைக் குழுவினர் தாக்கல் செய்து உள்ளனர்.

அதன்படி, இன்று 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஒரு மாணவனை தவிர மீதமுள்ள 33 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

34 plus two student exam result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->