தாம்பரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்!...பயணிகள் மகிழ்ச்சி!...எந்த ஊருக்கு தெரியுமா?
3 special train from tambaram passengers are happy know which town
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வாரம் 3 முறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதால், பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் ரயில் நிலையங்களின் தரவரிசை பட்டியலை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. அதில் தெற்கு ரயில்வே பட்டியலில் சென்னை தாம்பரம் முதலிடம் பிடித்தது. இதற்கிடையே தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாரம் 3 முறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயிலானது தாம்பரத்தில் இருந்து வரும் 19-ந் தேதி, 21-ம் தேதி, 23-ம் தேதி, 26, 28 மற்றும் 30-ம் தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.55 மணிக்கு ராமநாதபுரம் ரெயில் நிலையம் வந்தடைய உள்ளது.
மேலும் மறு மார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது வருகிற 20-ம் தேதி, 22-ம் தேதி, 24-ம் தேதி, 27, 29 மற்றும் அடுத்த மாதம் 1-ம் தேதி ஆகிய நாட்களில் காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தென்மாவட்ட மக்கள் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் ஆன்மிகவாதிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
3 special train from tambaram passengers are happy know which town