3 மணி நேர போராட்டம்... கட்டுக்குள் வராத தீ...! - NLC 2-வது அனல் மின் நிலையம்
3 hour protest Fire out of control NLC 2nd Thermal Power Plant
கடலூர் நெய்வேலி ''NLC '' 2 -வது அனல்மின் நிலையம் உள்ளது. அங்குள்ள மின்கம்பத்தில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பான தகவலை விரைந்து தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேரமாக பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து, 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வரும் நிலையில், மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க தீயணைப்புத்துறையினரால் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், தீ விபத்து ஏற்பட்ட இந்த மின் கம்பத்திலிருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
3 hour protest Fire out of control NLC 2nd Thermal Power Plant