இரண்டாயிரம் கோவில்களில் ஒருகால பூஜை.! ரூ. 40 கோடி நிதி வழங்கிய முதல்வர்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ,இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

அந்தவகையில், ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிநிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிநிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.கோபாலிடம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2000 temple One time worship


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->