3 திருமணம்! ஆனாலும் அடங்காத மகள் கள்ள காதலனுடன் ஓட்டம்! பேத்தி கொன்ற தாத்தா - பாட்டி!
Punjab illegal affair murder case
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக மூன்றாவது திருமணம் செய்து கொண்ட இளம்பெண், பின்னர் தனது கள்ள காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். செல்லும் முன், தன்னுடன் செல்ல முடியாததால் தனது 6 வயது மகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டார்.
தாயை காண முடியாததால் குழந்தை அடம்பிடித்து தொடர்ந்து அழுததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண்ணின் பெற்றோர், தங்கள் பேரக்குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை அருகிலிருந்த நெடுஞ்சாலையோர கால்வாயில் வீசிச்சென்றனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து நடந்த விசாரணையில், குற்றத்தை குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் ஒப்புக்கொண்டனர்.
அவர்கள்மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Punjab illegal affair murder case