9ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்... வாலிபருக்கு 20 ஆண்டு சிறை... நீதிமன்றம் அதிரடி..!
20 years prison for the youth who raped the ninth class girl in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெல்டர் மணிகண்டன்(34). இவர் 14 வயதுடைய 9ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி, மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
English Summary
20 years prison for the youth who raped the ninth class girl in Ariyalur