கடலூரில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொல்லை - இளம்பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை.!!
20 years jail penalty to women for harassment case in cuddalore
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை கடந்த 2014ம் ஆண்டு சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அந்த சிறுமிகள் ஒரு வாரத்துக்குப் பின் மீண்டும் வீடு திரும்பினர். அதன் பின்னர், அவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள் அவர்களிடம் விசாரித்ததில், சிறுமிகளை கடத்தி சென்ற நபர்கள், அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது.
இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமிகளின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் நடத்திய விசாரணையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோர் உட்பட 22 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 2016ம் ஆண்டு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி மற்று ஜெபினா உள்ளிட்டோர் கடந்த 2018ம் ஆண்டு தலைமறைவாயினர். அதன் பின்னர், கடலூர் மகளிர் நீதிமன்றம் தப்பியோடிய மூன்று பேரைத் தவிர 16 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு சிறை தண்டனை விதித்தது.
பின்னர் முக்கிய குற்றவாளிகளான சதீஷ்குமார், தமிழரசியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய ஜெபினா என்பவரை சிபிசிஐடி போலீஸார் கடந்த 2024ம் ஆண்டு கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் அனைத்து விசாரணையும் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், "ஜெபினா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் ஜெபினாவை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
20 years jail penalty to women for harassment case in cuddalore