'நம்பிக்கையற்ற 03 வாரிசு அரசியல் வாதிகள்' என முதல்வர் ஸ்டாலின், ராகுல், தேஜஸ்வி படத்தை வெளியிட்டுள்ள அண்ணாமலை..!
Annamalai releases a picture of Chief Minister Stalin and Rahul and Tejashwi as 3 hopeless out of sync dynasts
பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜ சதி செய்வதாகவும், அதற்கு தேர்தல் ஆணையகம் துணை போவதாகவும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சுமத்தி வருகிறார். இதற்காக அம்மாநிலத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதில் பங்கேற்க வரும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினைக்கு ராகுல் அழைப்பு விடுத்தார். அதன்படி, தனி விமானத்தின் மூலம் பீகார் சென்றுள்ள ஸ்டாலின், பீகாரில் முசாபர்பூரில் நடந்த ராகுல் யாத்திரையில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில், அண்ணாமலை மு.க. ஸ்டாலின் பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். ஒரு வீடியோவை வெளியிட்டு, கருத்து பதிவிட்டுள்ளார். 'அதாவது, ஹிந்தி பேசும் இளைஞர்களை தமிழகத்துக்கு வேலைக்கு அழைத்து வந்து பாஜவை வளர்க்க பார்க்கிறார்கள்; ஹிந்தி படிச்சா கக்கூஸ் தான் கழுவணும்; பான் பராக்தான் விக்கிறானுங்க; வடமாநிலத்து காரனுங்களுக்கு அறிவே இல்லை; எல்லாரும் முட்டாள்கள்' துன்று என்று ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் பேசிய அவதூறு பேச்சுக்கள் மற்றும் பதிவுகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பீஹாரில் இருக்கிறார். நமது பீஹாரி சகோதர சகோதரிகளைப் பற்றி ஸ்டாலின், அவரது கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறிய அநாகரிகமான கருத்துகளின் எவர்கிரீன் வீடியோ தொகுப்பை இணைத்துள்ளேன்.
ராகுலுடன் ஸ்டாலின் ஒரே மேடையில் பேசும்போது, அவரும் அவரது கட்சி தலைவர்களும் பீஹார் மக்களை பற்றி பேசிய இழிவான கேலி பேச்சுக்களை அம்மாநில மக்கள் முன்னிலையில் பெருமையுடன் மீண்டும் கூறுவார் என எதிர்பார்க்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது, நவீன தொழில் நுட்பமான (A I)-ChatGPT-இல் நம்பிக்கையற்ற, வாரிசு அரசியல் செய்யும் 03 நபர்களை காட்டும் படி கேட்டுள்ளது போன்ற கேள்வியையும், அதனுடன், பீஹாரில் ராகுலின் யாத்திரையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேஜஸ்வி யாதவ் பங்கேற்ற படத்தை வெளியிட்டு கிண்டலடித்துள்ளார்.
English Summary
Annamalai releases a picture of Chief Minister Stalin and Rahul and Tejashwi as 3 hopeless out of sync dynasts