ஐபோன் பிரியர்களுக்கு நற்செய்தி: வரும் செப்டம்பர் 09-இல் ஆப்பிள் ஐபோனின் 17 சீரிஸ் அறிமுகம்..!
Apple iPhone 17 series to be launched on September 9th
கையடக்க தொலைபேசி பாவனையாளர்களின் முதல் தெரிவும் எப்போதும் ஆப்பிள் ஐபோன் ஆகதான் இருக்கிறது. அதன்படி, பல புதிய சிறப்பம்சங்களுடன், 17 சீரிஸ் அறிமுகமாகவுள்ளது. இந்த அறிமுக விழா வரும் செப்ட09-ஆம் தேதி, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் நடைபெறவுள்ளது.
அன்றிரவு இரவு 10:30 மணிக்கு இந்திய நேரப்படி திட்டமிடப்பட்டு போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறித்த நிகழ்வு கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறுகிறது. இந்த விழாவில், ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாகவுள்ளன.

ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாகவுள்ளன. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை ஐபோன் 17 போன்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்க நாட்டின் வரி விதிப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
English Summary
Apple iPhone 17 series to be launched on September 9th