20 ருபாய் டோக்கன் தினகரன் வெளியிட்ட புதிய தகவல்! தினகரன் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


ஆர்கே நகர் தொகுதியில் காசிமேடு, பவர் குப்பத்தில் நடந்த தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏ  டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ரூபாய் நோட்டை காட்டி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் டோக்கன் இங்கே, பணம் எங்கே என்று கோஷம் எழுப்பினார்கள். 

இதற்கு பதிலளித்த தினகரன் 20 ரூபாய் நோட்டை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுசூதனனின் ஆட்கள் ஏற்பாடு செய்தவர்கள். அவர்கள் தோல்வியை மறைக்கவும், மக்களை கேவலப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர் என்று தினகரன் தெரிவித்தார்.  

Image result for 20 rupees token

மேலும் வாக்கிற்கு நாங்கள் பணம் கொடுப்பதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை எனவும் 20 ரூபாய் டோக்கன் கொடுக்க வில்லை எனவும் தினகரன் கூறினார்.இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் நாங்கள் பதிலடி கொடுக்க நேரிடும் என தினகரன் கூறியுள்ளார். 

மேலும் தினகரனின் மாமா திவாகரன் குறித்து பேசுகையில், திவாகரன் விரக்தியில் உள்ளார் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் கட்சி குடும்ப கட்சி இல்லை. திவாகரனை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ மனையில் காண்பிக்க வேண்டும்.  

Image result for divakaran dinakaran

அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது என நினைத்திருந்தேன் தற்போது மனநிலையும் பாதிக்கப்பட்டு உள்ளது அவர் புது கட்சி தொடங்கியதன் மூலம் தெரிய வருகிறது.  அவர் கூறியதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. யார் தூண்டுதலின் பேரில் அவர் பேசினார் என்பது விரைவில் தெரியவரும் என தினகரன் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 rupees token matter dinakaran warn


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->