#விருதுநகர் || ரயில் படியில் அமர்வதில் ஏற்பட்ட தகராறில் தவறி விழுந்த இருவர் பலி.!!
2 people died in a dispute over sitting on train steps
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்து குமார் மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் ஈரோடு செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயிலில் பயணம் செய்துள்ளனர். அந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் பயணம் செய்வதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் இருவரும் ரயிலின் படியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதைக் கண்ட சக பயணிகள் அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தூத்துக்குடி சரக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 people died in a dispute over sitting on train steps