சர்ச்சை வழக்கில் சிக்கிய மஹாவிஷ்ணு - மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.! 
                                    
                                    
                                   14 days court custody extened to mahavishnu 
 
                                 
                               
                                
                                      
                                            சென்னையில் அரசு பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய பிற்போக்குத்தனமான கருத்துகளால் சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் படி போலீசார் மஹாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். 

பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதிகள் மஹாவிஷ்ணுவை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மகா விஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததால், அவரது காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       14 days court custody extened to mahavishnu