13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை! ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!
13 students harassment complaint against teacher
விழுப்புரம், வாக்கூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளிப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் அவசர உதவி அலகின் பணியாளர் ஆகியோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது 3,4 ஆம் வகுப்புகளில் பயின்ற 2 மாணவிகள் தங்களிடம் ஆசிரியர் கருணாகரன் என்பவர் தீயதொடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களை தனியாக அழைத்து சம்பவம் தொடர்பாக கேட்டுக் கொண்டிருந்தபோது 3 ஆம் வகுப்பில் பயிலும் 7 மாணவிகளும் நான்காம் வகுப்பில் பயிலும் 4 மாணவிகள் தங்களிடம் அதே ஆசிரியர் தீய தோடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக ஆசிரியர் கருணாகரனை அழைத்து விசாரித்தபோது பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் கருணாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
13 students harassment complaint against teacher