பிளஸ்டூ தேர்வு முடிவுகள் | அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாவட்டம்! 100% தேர்ச்சிபெற்ற பள்ளிகள் எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை  4,33,000 மாணவிகளும், 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும், 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் எழுதினர்.

மொத்தம் 8.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%), 
மாணவியர்  : 96.38% 
மாணவர்கள்  : 91.45%
சிறைவாசிகள்  : 79 பேர் 
மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி

தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 99.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக அதிக அளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழில் இரண்டு பேர் மட்டுமே 100த்துக்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th Exam Result 2023 TN Govt School


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->