சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது.!
1.25 kg gold seized in chennai airport
சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது.!
சென்னையில் உள்ள மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். அப்படி அவர்கள் பயணம் செய்யும் போது தங்கம், அரிய வகை உயிரினங்கள், வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவைகளை தெரியாமல் மறைத்து வைத்து எடுத்து வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் சுங்க இலாகத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று கத்தார், துபாய் கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், ரூ.2.27 கோடி மதிப்புள்ள 1.25 கிலோ தங்கம் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
1.25 kg gold seized in chennai airport