ப்ளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்கள் கவனத்திற்கு - தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
12 th fail student re exam announce 2023
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 47,934 பேர் ஒரு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். ஒரு சில பேர் மூன்று பாடங்களிலும், இன்னும் சிலர் இரண்டு பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார்கள்.
இவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே மேற்படிப்பை தொடங்குவதற்கு ஏதுவாக வருகின்ற ஜூன் மாதம் 19ஆம் தேதி துணைத்தேர்வு நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தத் துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 19 ஆம் தேதி நடக்கக்கூடிய இந்த துணை தேர்வின் முடிவுகள், ஜூலை மாதமே வெளியிடப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த ஆண்டு தங்களது உயர்கல்வியை தொடர்வதற்கு உண்டான வாய்ப்பையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
12 th fail student re exam announce 2023