10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. ஹால்டிக்கெட் எப்போது? - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 27ஆம் தேதி முதல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th public exam hall ticket release on March 27


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->