மண்டபம் || இலங்கைக்கு கடத்தப்பட்ட 108 கோடி போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்திலிருந்து மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.  

இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதாவது, சமீபத்தில் மதுரை இரயில் நிலையம், சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மண்டபத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுக்கும் சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனால், வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வரும் போதைப் பொருட்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

108 crores worthable drugs seized in mandabam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->