ஈரோட்டில் 10 லட்சம் ரூபாய் கொள்ளை..! கார் டயரின் காற்றை இறக்கி விட்டு கொள்ளையன் ஓட்டம்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் என்னும் ஊரில்  கிரானைட் தொழிலதிபரின் காற்றை இறக்கி அவரிடம் இருந்து ரூபாய் 10 லட்சம் கொள்ளை அடித்து செல்லபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்த்தவர் சிவகுமார் இவர் கிரானைட் தொழிலதிபர் ஆவர். இவர் வீடு கட்டுவதற்காக கரூர் வைஸ்யா வங்கியில் கடன் கேட்டு 25 லட்சம் ரூபாய் கடனாக விண்ணப்பித்திருந்தார்.

முதல் தவணையாக வங்கியில் இருந்து 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு காரின் முன்னிருக்கையில் பணப்பையை வைத்துவிட்டு சிறிது தூரம் சென்றிருக்கிறார். அப்போது காரின் பின்பக்க டயரில் காற்றில்லாமல் இருப்பதாய் கவனித்தார்.

காரை விட்டு இறங்கிய அவர் டயரை பரிசோதித்து இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருத்தன் இருக்கையில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடினான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார், சத்தம்போட்டுக்கொண்டே கொள்ளையனை விரட்டி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவன் சந்தை பகுதியில் நுழைந்து மாயமாகி விட்டார். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 lakhs robbery at erode


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal