உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்.! பெண்கள் உட்பட 5 பேர் கைது..!
1 crore worth gold seized at Chennai airport
சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த நான்கு இலங்கை பெண் பயணிகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் நான்கு பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நான்கு பேரிடமிருந்து ரூபாய் 80.42 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 485 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூபாய் 28 லட்சம் மதிப்பிலான 518 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பிலான இரண்டு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 4 இலங்கை பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
1 crore worth gold seized at Chennai airport