14 வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த யுவராஜ் சிங்! சொன்ன உருக்கமான தகவல்!  - Seithipunal
Seithipunal


தோனிக்கு முன்பாகவே நான் கேப்டன் ஆவேன் என எதிர்பார்த்தேன் என 14 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். 

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் மிக முக்கியமானவர் யுவராஜ் சிங். 2007 20 ஓவர் மற்றும் 2011 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வென்றதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. 

2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்ற உலக கோப்பையில் இந்திய அணி படுதோல்விக்கு பிறகு பல சங்கடங்களை சந்தித்து அணி மிகுந்த குழப்பத்தை சந்தித்தது. வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், உடனடியாக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் கொண்டார்கள். ஓரளவு வெற்றிகரமான தொடராக அது அமைந்தாலும் அடுத்ததாக உடனடியாக நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணி எந்ம தயார் படுத்தலும் இல்லாமல் இருந்தது.

உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ஒரே ஒரு சர்வதேச 20 ஓவர் போட்டியில் தான் இந்திய அணி விளையாடி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணியின் அப்போதைய மூத்த வீரர்களான சச்சின் கங்குலி டிராவிட் ஆகியோர் விரும்பாத நிலையில் இளம் அணியை அறிவிக்க பிசிசிஐ தயாராக இருந்தது. 

யுவராஜ் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்த வேளையில், தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யுவராஜ், நான் கேப்டனாக நியமிக்கபடுவேன் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தோனியை நியமித்தார்கள். எனக்கு யார் கேப்டன் என்பது முக்கியமில்ல.  அணியில் ஒரு வீரராக நான் எப்பவும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது மட்டுமே கவனத்தில் கொண்டு இருந்தேன்.

கங்குலி கேப்டனாக இருந்தாலும் சரி, டிராவிட், தோனி கேப்டனாக இருந்தாலும் சரி அணியில் என்னுடைய பங்களிப்பை மட்டும் உறுதியாக அளிக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன் என யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yuvraj Singh revealed his untold story after 14 years


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal