உலகக்கோப்பை போட்டி: அத்துமீறி ஆடுகளத்தில் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்!  - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை போட்டி கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலக கோப்பையில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பௌலிங் செய்து வருகிறது. 

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 115/3 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியின் போது பாதுகாப்பை மீறி பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென ஆடுகளதினுள் நுழைந்து விராட் கோலி கட்டியணைத்தார். 

இதனை பார்த்த பாதுகாவலர்கள் உடனடியாக பாலஸ்தீன ஆதரவாளரை கைது செய்து வெளியேற்றினர். கடந்த மாதம் ஏழாம் தேதி காசாவில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 5000 ஏவுகணைகளை வீசிய ஹமாஸ் ராணுவம் அதிரடியாக அந்நாட்டுக்குள் ஊடுருவி 1200 பேரை கொலை செய்தனர். 

இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அம்மாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. 

அதற்காக காசா பகுதியை ஒரு மாதத்திற்கு மேல் முற்றுகையிட்டு கடுமையான குண்டு வீழ்ச்சி நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாக காசாவில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup match Palestinian support entered pitch


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->