'Dark Pattern' வடிவமைப்புகளை பயன்படுத்தியதாக இண்டிகோ, ஜெப்டோ உள்ளிட்ட 09 நிறுவனங்களுக்கு அபராதம்..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு கொண்டு வந்த "டார்க் பேட்டர்ன் தடுப்பு மற்றும் முறைப்படுத்தல் விதிமுறை''களின் படி, போலி அவசரம் காட்டுதல், மறைமுகக் கட்டணங்களைச் சேர்த்தல், தெரியாமல் பொருள்களை கூடைக்குள் சேர்த்தல், சந்தா பெறுதல் உள்ளிட்ட 13 வகையான ஏமாற்று முறைகளைத் தடை செய்துள்ளது.

அந்தவகையில், இணையவழியில் சேவை வழங்கும் டிஜிட்டல் தளங்களில் நுகர்வோரின் விருப்பங்களைக் கையாண்டு, அவர்களை ஏமாற்றும் வகையில் ;டார்க் பேட்டர்ன்' வடிவமைப்புகளைப் பயன்படுத்தியதற்காக இண்டிகோ, ஜெப்டோ, பர்ஸ்ட்கிரை, பிசிக்ஸ்வாலா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட 09 முன்னணி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அபராதம் விதித்துள்ளது.

இதில் விரைவு வர்த்தகத் தளமான ஜெப்டோ, ஆரம்பத்தில் குறைந்த விலையைக் காண்பித்துவிட்டு, பின்னர் கையாளுதல் கட்டணம் மற்றும் உறுப்பினர் கட்டணங்களை மறைமுகமாகச் சேர்த்ததால் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கல்வித் தளமான பிசிக்ஸ்வாலாவில் 'பிடபிள்யூ அறக்கட்டளைக்கு' ரூ.10 நன்கொடை தானாகவே தேர்வு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், இலவசப் பயிற்சிகளைப் பெற தனிநபர் விவரங்களைக் கட்டாயமாகப் பெற்றதும் நுகர்வோர் ஆணையத்தின் ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, அந்த நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இண்டிகோ, புக்மைஷோ, அனுஜ் ஜிண்டால், பர்ஸ்ட் கிரை, பார்ம்ஈஸி, மெக்காபி, ஸ்பெஸ்ஜெட் போன்ற நிறுவனங்களுக்கும் டார்க் பேட்டர்ன் வடிவமைப்புகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

9 companies including Indigo and Zepto fined for using dark pattern designs


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->