ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு பரிசீலனை; பொதுமக்களை பாதிக்குமா? - Seithipunal
Seithipunal


மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்த வரி விதிப்பு மற்​றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா​வில் வங்​கி​களும் சேவை நிறு​வனங்​களும் மின்​னணு பரிவர்த்​தனை​களுக்கு கட்​ட​ணம் வசூலிப்​ப​தற்​கான தடையை நீக்க முன்​மொழிந்​துள்​ளார். இதையடுத்​து, ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் விதிக்க வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அரசு புள்​ளி​விவரங்​களின்​படி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்​ணிக்​கை​யில் ரூ.2,000-க்கு மேற்​பட்ட பரிவர்த்​தனை​களின் பங்கு 5% மட்​டுமே. இருப்பினும், இவை மொத்த பரிவர்த்​தனை மதிப்​பில் 65% பங்​கைக் கொண்​டுள்ளன. தாவது கிரெடிட் கார்​டு​களைப் போல் அல்லாமல், இதில் நிதி மூலதனச் செலவு இல்​லாத​தால், வசூலிக்கப்​படும் கட்​ட​ணத்​துக்கு ஒரு குறிப்​பிட்ட உச்​சவரம்பு நிர்ண​யிக்​கப்பட வாய்ப்​புள்​ளது.

அந்தவகையில் அதி​காரி​களின் கூற்​றுப்​படி, ரூ.2,000-க்கு உட்​பட்ட பரிவர்த்​தனைகளுக்​குக் கட்​ட​ணம் இல்​லை என்று கூறப்படுகிறது. இதனால் காய்​கறி, பால், மளிகைப் பொருட்​கள் வாங்​கு​வது மற்​றும் ஆட்​டோ, டாக்சி கட்டணம் செலுத்​து​வது போன்ற அன்​றாட சிறு செல​வு​கள் இதனால் பாதிக்​கப்படாது என்று கூறப்படுகிறது. எனவே, 95% பரிவர்த்​தனை​கள் இந்த கட்டண வரம்​பிற்​குள் வராது. ஆனால், வணி​கர்​கள் இந்​தக் கட்டணத்தை வாடிக்​கை​யாளர்​கள் மீது சுமத்​து​வார்​களா அல்​லது தாங்​களே ஏற்​றுக்​கொள்​வார்​களா என்​பது அவர்​களின்​ விருப்பத்தைச்​ சா​ர்​ந்​தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government considering charging fees for UPI transactions above Rs 2000


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->