ஆகா! அற்புதமான ஆட்டம்! ஒத்த ரன் தான்! அந்த அர்ப்பணிப்பு இருக்கே! கற்றுக்கொள்ளுங்கள் விராட் கோலியிடம் - இயன் பிஷப்! - Seithipunal
Seithipunal



கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து 500 ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் நான்காவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

மேலும், 500 ஆவது ஆட்டத்தில் அரை சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில், நேற்று 161 பந்துகளில், 87 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி , 100 ரன்கள் கடப்பதற்கு உண்டான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

500-வது போட்டியில் செஞ்சுரி அடித்த முதல்வீரர் என்ற பெருமையும், சாதனையும் விராட் கோலி படைப்பார் என்று இந்திய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலியின் ஆட்டத்தையும், அவர் விளையாடும் நுணுக்கங்களையும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப், தனது நாட்டு வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்த இயன் பிஷப் அளித்த பேட்டியில், "161 பந்துகளில், 87 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி, 8 பவுண்டர்களையும், 30 சிங்கிள் ரன்னையும், 11 - இரண்டு ஓட்டங்களையும், ஒரு மூன்று ஓட்டத்தையும் எடுத்துள்ளார்.

500 ஆவது சர்வதேச ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீரர், களத்தில் கிடைக்கும் ஒவ்வொரு ரன்னுக்குமான மதிப்பை அறிந்தவராக விளையாடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அந்த ஒரு ரன்னுக்காக டைவ் அடித்து, உடலை வருத்தி கொள்ளும் அவரின் அந்த அர்ப்பணிப்பை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், டெஸ்ட் ஆட்டங்களில் பவுண்டரிக்கான பந்து கிடைக்கும் என்று காத்திருக்கக் கூடாது. விராட் கோலியை போல ஓடி, உழைத்து ரன்களை எடுக்க வேண்டும். இதனை நீங்கள் அவரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்" இயன் பிஷப் அறிவுரை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

west indies ian bishop Say Abour Virat ind vs wi second test 2023 virat kohli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->