தோனியை புறக்கணித்த கனவு அணி! வெளியான அணிக்கு புதிய கேப்டன் யார் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான ஐபிஎல் 2019 சீசன் கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கியது. இன்று பைனல் நடக்க இருக்கும் நிலையில், லீக் போட்டிகளின் அடிப்படையில் இந்த வருடத்திற்கான கனவு அணியினை இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் வெளியிட்டுள்ளார். 

ஒவ்வொரு வருடமும் லீக் ஆட்டத்தில் வீரர்களின் செயல்பாட்டினை பொறுத்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தினை ஆராய்ந்து அவர்களின் கனவு அணியை வெளியிடுவார்கள். 

ஏற்கனவே இந்திய அணியின் சுழல் ஜாம்பவான் கும்ப்ளே வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் தனது கனவு அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான  விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி போன்றோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. 

ஷேவாக்கின் கனவு அணியில் ஹைதராபாத் அணி சார்பில் வார்னர், பெயர்ஸ்டோ, பஞ்சாப் அணி சார்பில் ராகுல், ராஜஸ்தான் அணி சார்பில் ஷ்ரேயாஸ் கோபால், கொல்கத்தா அணி சார்பில் அந்ரே ரஸல், மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, ராகுல் சாகர், டெல்லி அணி சார்பில் ஷிகர் தவான், ரிஷப் பந்த், ரபாடா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சென்னை, பெங்களூர் அணி தரப்பில் யாருமே பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷேவாக்கின் 11 பேர் கொண்ட கனவு அணி : 1. ஷிகர்  தவான், 2. ஜானி பெயர்ஸ்டோ, 3. கேஎல் ராகுல், 4. டேவிட் வார்னர், 5. ரிஷப் பந்த், 6. அந்ரே ரஸல், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஷ்ரேயாஸ் கோபால், 9. ராகுல் சாகர் 10. ரபாடா, 11. பும்ரா

அணியின் கேப்டனாக டேவிட் வார்னரை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய மும்பை, டெல்லி அணியில் தலா மூவர் இடம்பெற சென்னை அணியில் ஒருவர் கூட இடம் கிடைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது. 

கும்ப்ளே அணியில் இடம்பிடித்த டோனி, ஸ்ரேயாஸ் அய்யர், தாஹிர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு பதிலாக ஜானி பெயர்ஸ்டோ, ராகுல் சாகர், ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virendar sehwag picks his ipl xi


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal