தாதா கங்குலியின் சாதனையையே முறியடித்த கோலி!  - Seithipunal
Seithipunal


இந்திய தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகின்றது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. 

இந்த நிலையில், இந்திய தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டிக்கு, இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இதன் மூலம், விராட் கோலி தலைமைதாங்கும் 50வது டெஸ்ட் போட்டி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கி இருந்தது  குறிப்பிடத்தக்கது. தற்போது  50வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலி தலைமை தாங்கியதான்  மூலம், கங்குலியின் சாதனையை விராட் முறியடித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli breaks ganguly record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal