நாயகன் மீண்டும் வரார்..!! ஆர்.சி.பி கேப்டனாக களம் இறங்கினார் விராட் கோலி..!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. 

இன்றைய போட்டியில் காயம் காரணமாக ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் விளையாடாததால் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய விராட் கோலி "டூப்ளிசிஸ் காயம் காரணமாக இன்று ஃபீல்டிங் செய்ய முடியாது. எனவே அவருக்கு பதிலாக வைஷக் களமிறங்குகிறார். நாங்கள் விரும்பியதைச் செய்ய வேண்டும். நாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பேட்டிங் செய்திருப்போம்.

ஆடுகளம் மெதுவாக இருக்கலாம், சில சமயங்களில் ஆட்டத்தின் போக்கு ஆழமாகச் சென்று பந்துவீச்சாளர்களுக்கு உதவும். ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை எடுத்துக்கொள்வது, சொந்த விளையாட்டில் கவனம் செலுத்துவது, நெருக்கடியான சூழ்நிலைகளை அதிகம் பயன்படுத்துவோம். நாங்கள் இதுவரை போட்டியில் அதைச் செய்யவில்லை.  எங்களுக்கு வேறு எந்த மாற்றமும் இல்லை" என தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி களமிறங்குவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virat Kohli as the captain of the RCB team for today match


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->