குளு குளுன்னு கேசர் பிக்ஸ்தா குல்பி...! சும்மா ஒரு ட்ரை குடுத்து பாருங்க...
kesar pista kulfi give it a try
கேசர் பிஸ்தா குல்பி...கேசர் பிஸ்தா குல்பி அசத்தலான சுவையில் அருமையாக வீட்டில் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பால் 5 கப்
சர்க்கரை 5 டேபிள்ஸ்பூன்
சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ 2 சிட்டிகை
பிஸ்தா பருப்பு 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் 4

செய்முறை:
முதலில், கேசர் பிஸ்தா குல்பி செய்வதற்கு ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் சேர்த்து பத்து நிமிடங்கள் சிம்மில் வைத்து காய்ச்சவும். பிறகு சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் குங்குமப்பூவை சேர்த்து தனியாக வைக்கவும். பிறகு சோள மாவை மூன்று மடங்கு தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து பாலில் சேர்த்து விடாது கிளறவும். பிறகு பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பிறகு பால் கெட்டியாகும் போது அதில் குங்குமப்பூ கலந்த பாலைச் சேர்த்து, அதனுடன் பிஸ்தா மற்றும் சர்க்கரை பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு, நன்கு ஆறியவுடன் குல்பி மோல்டில் போடவும். 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். எடுக்கும் போது, தண்ணீரில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான கேசர் பிஸ்தா குல்பி தயார்.
English Summary
kesar pista kulfi give it a try