ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவான பாகிஸ்தான் நிலநடுக்கம்...!
Earthquake in Pakistan measuring 4point6 on Richter scale
பாகிஸ்தான் நாட்டில்,இன்று பிற்பகல் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது இன்று பிற்பகலில் 1.26 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இதனால் ஏற்பட்ட கட்டிட சேதம், மக்கள் பாதிப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதுமட்டுமின்றி, உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். இது பல பெரிய பிளவுகளால் கடக்கப்படுவதன் விளைவாக, பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை.
English Summary
Earthquake in Pakistan measuring 4point6 on Richter scale