ஊட்டியில் நாய்கள் கண்காட்சி...! விஜய பிரபாகரனுக்கு சொந்தமான நாய் சிறந்த நாயாக தேர்வு...!
Dog show in Ooty Vijaya Prabhakaran dog selected as best dog
கடந்த 3 நாட்களாக, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், கோடைவிழாவின் ஒரு பகுதியாக 137-வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் ஜெர்மர் ஷேப்பர்டு,சிப்பிப்பாறை, சிஹூஹா,கோல்டர் ரீட்டிவர்,ஹோண்டு, லேப்ரடார், பெல்ஜியன் மாலினாய்ஸ், டாஸ் ஹவுண்ட்,கோம்பை, கிரேட் டேன், பீகிள், நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், கன்னி உள்பட 56 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

மேலும், கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.இந்தப் போட்டியில் டி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மலேசியாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் இருவரும் நடுவர்களாக இருந்தனர்.
இந்தக் கண்காட்சியின் இறுதிநாளான நேற்று, இந்த ஆண்டின் சிறந்த நாய் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான 'இங்கிலீஷ் செட்டர் ரக நாய்', சிறந்த நாயாக தேர்வு செய்யப்பட்டது.
மேலும், ஜப்பானை சேர்ந்த நடுவர் சந்தோஷி இந்த நாயை தேர்வு செய்தார்.அதுமட்டுமின்றி, கொல்கத்தாவை சேர்ந்த ராய் என்பவருக்கு சொந்தமான டாபர் மேன் ரக நாயை தென்னாப்பிரிக்க நடுவர் மைக்கேல் தேர்வு செய்தார்.
English Summary
Dog show in Ooty Vijaya Prabhakaran dog selected as best dog