ஆண்டின் சிறந்த நாய் - கேப்டன் மகன் விஜய பிரபாகரன் நாய் தேர்வு.!!
year of best dog award to captain vijayakant dog
தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மொத்தம் 56 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டியின் நடுவர்களாக டி.கிருஷ்ண மூர்த்தி, மலேசியாவை சேர்ந்த கோபால கிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றினர். இந்தக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று ‘ஆண்டின் சிறந்த நாய்’ விருது வழங்கப்பட்டது. இதில், நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான இங்கிலீஷ் செட்டர் ரக நாய், சிறந்த நாயாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த நாயை ஜப்பானை சேர்ந்த நடுவர் சந்தோஷி தேர்வு செய்தார். மேலும், கொல்கொத்தாவை சேர்ந்த ராய் என்பவருக்கு சொந்தமான டாபர்மேன் ரக நாயை தென்னாப் பிரிக்க நடுவர் மைக்கெல் தேர்வு செய்தார். இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய கென்னல் கிளப் தலைவர் ரஜினி கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மோத்தேஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
English Summary
year of best dog award to captain vijayakant dog