நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை முதல்முறையாக தோற்கடித்துள்ள வைஷாலி..! - Seithipunal
Seithipunal


நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியனான ஜூ வென்ஜூனை தோற்கடித்துள்ளார். நார்வேவின் ஸ்டாவஞ்சர் நகரில் சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி, தனது 08-வது சுற்றில் 05 முறை சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜூனை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜூ வென்ஜூனை வைஷாலி தோற்கடித்து அசத்தியுள்ளார்.

உலக சாம்பியனான வென்ஜூனை வைஷாலி தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். குறித்த வெற்றியின் மூலம் வைஷாலி ஒரு புள்ளி கிடைத்துள்ளது.  இன்னும் 02 சுற்றுகள் எஞ்சியுள்ளது. 06 வீராங்கனைகள் கொண்ட பட்டியலில் சீனாவின் லெய் டிங்ஜியை விட அரை புள்ளிகள் பின்தங்கி, வைஷாலி 05-வது இடத்தில் உள்ளார். 

கடந்த ஆண்டு இதே நார்வே செஸ் போட்டியில் வைஷாலியின் சகோதரர் பிரக்யானந்தா, உலக சாம்பியனான நார்வேவின் மேக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaishali defeats world champion Zhu Wenjun for the first time in Norway chess tournament


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->